சர்க்கார் திரைப்படமும் யாழ் தியேட்டரின் திருவிளையாடலும் இதோ!!

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகியது. யாழ்ப்பாண தியேட்டர்களில் சர்கார் திரைப்படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிகளிற்கான ரிக்கெட்கள் பல நாட்களின் முன்னரே விற்று தீர்ந்து விட்டதாக நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்தநிலையில் பருத்தித்துறையிலுள்ள திரையரங்கு ஒன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து தியேட்டர்களிலும் நுழைவு கட்டணமாக 500 ரூபாவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று பருத்தித்துறை திரையரங்கில் 700 ரூபா அறவிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக்கெட்டில் 500 ரூபாவே குறிப்பிடப்பட்டிருந்தது. திரையரங்கில் இதனை இளைஞர்கள் பலர் சுட்டிக்காட்டியும், திரையரங்க நிர்வாகம் நடவடிக்கையெதையும் எடுக்கவில்லை.

நாளை இது குறித்து பருத்தித்துறை பிரதேசசபையில் முறைப்பாடு பதிவுசெய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று குறித்த திரையரங்கில் குறித்த நேரத்திற்கு காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை, ரிக்கெற் விநியோகம், ஒழுங்கமைப்பில் சீரின்மை என இளைஞர்கள் கொந்தளித்தனர். இதனால் அமைதியின்மை ஏற்பட்டது. பருத்தித்துறை பொலிசார் திரையரங்கிற்கு வந்ததன் பின்னரே, நிலைமை சுமுகமாகியிருந்தது.