டக்ளசிடம் பறந்துவந்தார் தவராசா.

நீர் வற்றிய குளத்திலிருந்து பறந்த கொக்கு மீண்டும் குளத்தில் நீர் வந்தவுடன் திரும்பி வருவது போல் டக்ளசிடம் ஒட்டிக் கொண்டார் தவராசா. நேற்று இரவு ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற இடத்தில் டக்ளசிடம் ஒட்டிக்கொண்டார் முன்னாள் வடக்கு எதிர்க்கட்சித்தலைவரான தவராசா.

டக்ளசை விட்டுச் சென்ற இவ்வாறான ஏராளமான கொக்குகள் மீண்டும் டக்ளசிடம் வருவதற்கு ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவருகின்றது. குளத்தில் இருக்கும் மீன்களை முற்றாக தின்றுவிட்டு குளம் வற்றிய பின்னர் செல்லும் இக் கொக்குகள் தொடர்பாக டக்ளஸ் அவதானமாக இருப்பாரா? அல்லது கொத்திச் செல்லட்டும் என கண்டும் காணால் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதே வேளை தவராசா டக்ளசிடம் சுருட்டிய 8 கோடிரூபாவை மீண்டும் கொடுப்பாரா என டக்ளசின் விசுவாசிகள் ஆர்வத்துடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.