யாழ்ப்பாண வடிவேலு மதவாச்சிப்பகுதியி்ல் வைத்து பொலிசாரால் கைது !!

தனக்குச் சொந்தமான சொகுசுபேரூந்தில் கொழும்பிலிருந்து யாழ் சென்றுகொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாண வடிவேலு மதவாச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த சொகுசு பேருந்தை பொலிசார் மறித்த போது நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த பொலிசார் பேரூந்தைத் துரத்திச் சென்று மறித்து பேருந்தில் பயணம் செய்த வடிவேலுவை கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ஏற்கனவே ஊர்காவற்துறை நீதிமன்றில் வடிவேலுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.