யாழில் 58 வயது ஆசிரியையையும் விட்டு வைக்காத கல்வி அதிகாரிகள்!! நடந்தது என்ன?

58 வயதான ஆசிரியைக்கும் கட்டாய இடமாற்றம் வழங்கிய மாகாண கல்வி அமைச்சு..

ஆசிரியர்களிற்கான வருடாந்த இடமாற்றத்தின்போது 58 வயது ஆசிரியைக்கும் கட்டாய இடமாற்றத்தை வடக்கு மாகாண கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்கள் பலருக்கு உள்ளக இடமாற்றம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தில் குறித்த ஆசிரியருக்கு தற்போது கற்பிக்கும் அதே பாடசாலையில் 7 ஆண்டுகளாக கற்பித்து

இடமாற்றம் வழங்குமாறு விண்ணப்பித்த ஆசிரியர்களிற்கு இடமாற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் 58 வயதை தாண்டிய ஆசிரியை ஒருவருக்கும் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்ட 58 வயது ஆசிரியை குறித்த பாடசாலையில் கடந்த 4 ஆண்டுகளே கல்வி கற்பிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுவதோடு

அவரது ஓய்வுக் காலத்திற்கு இன்னமும் இரண்டு ஆண்டிற்கும் உட்பட்ட காலமே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த விடயம் தற்போது எமது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர்களிடம் இருந்து கிடைத்த விபரத்தின் பிரகாரம் இடமாற்றப் பட்டியல் தயார் செய்த நிலையில்

இவை தொடர்பில் மறுபரிசீலணை மேற்கொண்டு உரிய தீர்வு முன்வைக்கப்படும். எனப் பதிலளித்தார்.