யாழ் இளைஞனிற்கு நேர்ந்த விபரீதம்!! புகையிரத பயணமே இறுதியான சோகம்

யாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குறித்த இளைஞன் விழுந்துள்ளான். ஓமந்தை- சாந்தசோலை கிராமத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் விளையாட்டாக ரயிலில் இருந்து குதித்ததாகவும், தவறி விழுந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன.