ஈழத்து ஸ்ருதி நடிக்கும் திகில் திரைப்படம்

தமிழ் நாட்டில் எடுக்கும் திகில் திரைப்படங்களுக்கு நிகராக, லண்டனில் தயாராகி வரும் திரைப்படம் தான் “பருந்து”. ஈழத்து பேரழகி ஸ்ருதி கதாநாயகியாக நடிக்க, மேலும் பல ஈழத் தமிழ் பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.

நேற்றைய தினம்(06) லண்டனில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் அறிமுக விழவில் பல ஊடகவியலாளர்கள், நடிகர்கள், திரை உலக பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

லண்டனிலும் இலங்கையின் வட கிழக்கிலும் இத்திரைப்படத்தின் , முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் மற்றும் டரைக்கர் தெரிவித்தார்.

ஈழத் தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகள் இந்த திரைப்படம் ஊடாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற உள்ளதோடு. இத்திரைப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பருந்து திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமையை. அன் நாட்டில் உள்ள மிகப்பெரிய கம்பெனி ஒன்று ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும்.

குறித்த திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்றும் ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டதும் குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.