ஒவ்வொரு கூட்டமைப்பு எம்.பிக்கும் 20 கோடி ரூபாவுக்கு எகிறியது பேரம்!!

ஒவ்வொரு கூட்டமைப்பு எம்.பிக்கும் 20 கோடி ரூபாவுக்கு எகிறியது பேரம்!!

இதே வேளை எமது செய்திச் சேவைக்கு கிடைத்த தகவலின்படி கூட்டமைப்பின் ஒவ்வொரு எம்.பிக்களினதும் விலை 20 கோடிரூபாவுக்கு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் மகிந்த தரப்பு கூட்டமைப்புடன் பேரம் பேசலில் ஈடுபட்டுவருவதுடன் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு எம்.பிகளுடனும் தனித்தனி தொடர்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்களுக்கு 20 கோடி ரூபாவும் வாக்களிப்பில் எம்.பி பங்குபற்றாவிட்டால் 15 கோடிரூபாவும் கொடுப்பதற்கு மகிந்த தரப்பு முன்வந்துள்ளதாம்.

இதே வேளை ரணில் தரப்பும் கூட்டமைப்புடன் பேரம் பேசலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை கூட்டமைப்பின் எந்த ஒரு எம்.பியும் தமிழர்களின் நலன்கள்பற்றி இருதரப்புடனும் மூச்சுக்காட்டவேயில்லை என கூட்டமைப்பின் முக்கிய கட்சிப் பிரமுகர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.