சசிகுமாருடன் ஜோடி போட்ட பிரேமம் நடிகை

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். 

இந்நிலையில் சசிகுமாரின் இந்த படத்தில்  சூரி காமெடி நடிகராக நடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிருந்தனர். ஆனால், படத்தின் ஹீரோயின் யார் என்பது தான் கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இதில் பலரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றார்கள், ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறி விட்டார்.

தற்போது வந்த தகவலின்படி பிரேமம் படத்தில் செலினாக கலக்கிய மடோனா ஜெபஸ்டின் தான் இப்படத்தின் ஹீரோயினாம்.

இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.