டிஸ்னியின் 'அலாதீன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! பூதமாகும் வில் ஸ்மித்!

1992ஆம் ஆண்டு வெளியான பேன்டஸி திரைப்படம் அலாதீன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

இத்திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் அனிமேசன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமன டிஸ்னிநிறுவனம் புத்தம் புது தொழில்நுட்பத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளது.ஹாய் ரிட்சி அலாதீன் படத்தை இயக்குகிறார். 2019ம் ஆண்டு மே 24ம் தேதி படம்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேஸ்டரை டிஸ்னி தனது டிவிட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அலாதீன் படத்தில் வரும் ஜீனி கதாபாத்திரம்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ஜீனி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல்கொடுத்து உயிர் கொடுத்த ராபின் வில்லியம்ஸ். ஆனால் இவர் இப்போது உயிருடன்இல்லை, இதையடுத்து ஜீனி கதாபாத்திரத்துக்கு  பின்னணி குரல் கொடுக்க ஸ்மித்தை ஓப்பந்தம் செய்துள்ள டிஸ்னி நிறுவனம்.