14 வயதுச் சிறுமி காதல் தோல்வியில் தீ மூட்டி எரிந்து பலி!!

தனக்குத் தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவியான சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.கோண்டாவில் மேற்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி இந்த மாதம்-01 ஆம் திகதி தனக்குத் தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பல நாட்களாக மேற்படி சிறுமிக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் யாழ். கோண்டாவில் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் சத்தியா (வயது- 14) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சிறுமியின் சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.