வைரமுத்துவை அடுத்து பாலியல் புகாருக்குள்ளான இன்னொரு பிரபலம்

திரையுலக பிரபலங்களுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும். பாலிவுட், டோலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக சின்மயி பதிவு செய்யும் ஒவ்வொரு டுவீட்டும் ஒரு அணுகுண்டு போல் திரையுலகினர்களை தாக்கி வருகிறது.

இந்த நிலையில் வைரமுத்து, ராதாரவியை அடுத்து இன்னொரு தொலைக்காட்சி பிரபலம் மீதும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தான் 13 வயதாக இருந்தபோது அந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆடிஷன் சென்றதாகவும், அப்போது அந்த பிரபலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் தனக்கு நிகழ்ந்த அந்த கொடுமைதான் ஞாபகம் வருவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டையும் சின்மயி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இப்படியே போனால் இன்னும் எத்தனை குற்றச்சாட்டுக்கள் யார் யார் மிது எழப்போகிறதோ தெரியவில்லை. மொத்தத்தில் இன்னும் சில நாட்களுக்கு இந்த பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.