சர்கார் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் குறித்து முக்கிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். அரசியல் கருத்துக்களை தாங்கி வருவதாக நடிகர் விஜய்யே வெளிப்படையாக சர்கார் குறித்து ஆடியோ வெளியிட்டு விழாவில் தெரிவித்திருந்தார், இதனால் இந்த படத்தின் ஒவ்வாரு அப்பேட் தகவலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் வரும் அக்டோபர்

19ம் தேதி மாலை 6மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்காரில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பழ கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மேலும் தெலுங்கிலும் சர்கார் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.