யாழ்ப்பாணத்தில் திடீரென குவிக்கபட்டுள்ள பொலிஸார்....ஆவா குழுவிற்கு எதிராக அதிரடி வேட்டை

இவர்கள் தவிர புலனாய்வுப் பிரிவினரும் தேடுதல்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, நேற்றுக்காலை 6 மணி தொடக்கம், 11 மணி வரை வாகனங்கள், குறிப்பாக, உந்துருளிகள் சோதனையிடப்பட்டு, 81 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குழு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த பொலிஸ் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை குறிவைத்தே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சாதாரண மக்களின் வாழ்வை குழப்பாதபடி பொலிஸாரின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலில் ஆவா குழுவினர் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு, ஆவா குழு மற்றும் ஏனைய குழுவினரின் தங்குமிடங்கள், மற்றும் நடமாடும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.