கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மூன்று பிரதான வீதிகளில் CCTV பொருத்த நடவடிக்கை…

கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மூன்று பிரதான வீதிகளில் மறைகாணி (சி.சி.ரி.வி) பொருத்த நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தி, கொக்குவில் புகையிரத நிலைய வீதி மற்றும் இராமசாமி பரியாரியார் சந்தி ஆகிய இடங்களில் மறைகாணி (சி.சி.ரி.வி) பொருத்துமாறு கோப்பாய் காவற்துறையினர் நல்லூர் பிரதேச சபையிடம் கோரி இருந்தனர். அதனை அடுத்தே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திகளில் வாகன நெரிசல்கள் அதிகமாக உள்ளதாகவும் , அப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாகவும் அதனால் அப்பகுதிகளில் மறைகாணி(சி.சி.ரி.வி) பொருத்துவதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்த முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.