அதி சக்திவாய்ந்த போதைப் பொருட்களுடன் மானிப்பாயில் சிக்கிய 3 பேர்!!

ஹெரோ­யின்  மற்­றும் கஞ்­சா­வு­டன் மானிப்­பா­யில் மூவர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று மானிப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.மானிப்­பாய் பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில்சந்­தே­க­ந­பர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.மானிப்­பாய்  பிப்­பிலி மயா­னப் பகு­தி­யில் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு நேற்று மாலை சோதனை நடத்­தி­யது.அதன்­போது போதைப் பொருள்­களை உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.550   மில்­லிக்­கி­ராம் ஹெரோ­யி­னு­டன் இரு­வ­ரும், 50 கிராம் கஞ்­சா­வு­டன்ஒரு­வ­ரும் கைது செய்ய்­ப­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கைதா­ன­வர்­கள்   மானிப்­பா­யைச் சேர்ந்த 25,30,34 வய­து­களை உடை­ய­வர்­கள் என்­றும் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர்­கள் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் மானிப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.