நட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

எடுத்தது ஒரே படம். ஆனால் அந்த ஒரே  படத்திலேயே அடுத்த படம் எப்போதுவரும் ஏக்கத்தை என்ற ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக இயக்குனர்களுக்கே ஏற்படுத்தியவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்யக்காண்டம் படத்தையடுத்து 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

ஆந்தாலஜி எனும் ஜானரில் ஐந்து தனித்தனிக் கதைகளைக் கொண்ட சினிமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் திரைக்கதையை குமாரராஜாவோடு இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின் மற்றும் நீலன் கே சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். பி சி ஸ்ரீராம், பி எஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகிய தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட் எனும் நிறுவனம் மூலம் தியாகராஜன் குமாரராஜாவே தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் பொரொடக்‌ஷன் வேலைகள் நட்ந்து வரும் இந்தப் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.