வடமராட்சியில் குடித்து ரகளை செய்த 75 வயதுக் காவாலிக்கு நடந்த கதி!!

யாழ்.வடமராட்சி பருத்தித்துறையில் மது அருந்திவிட்டுத் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வந்த 75 வயது முதியவரை எதிர்வரும்- 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நேற்றைய தினம்(13) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த முதியவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிலுள்ளவர்களைத் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் ஏசியும் முரண்பட்டும் வந்துள்ளார். அத்துடன் வீதியில் வந்தும் தனது ரவுடித்தனத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியவரைக் கைது செய்த வல்வெட்டித் துறைப் பொலிஸார் நேற்றைய தினம் அவரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.