யாழ் பல்கலையில் பதற்றம் விசேட அதிரடிப்படையினர் விரைவு!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்டுச் செல்லவுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.