பார்த்ததுமே ஒருவருடைய அந்தரங்க வி‌ஷயங்களை புரிந்து கொள்வேன்: ரகுல் பிரீத் சிங்

தெலுங்கு தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், சினிமாவில் தனது அனுபவம் குறித்து அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா? என்பது என் கையில் இல்லை. ஆனால், ஒரு படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்துக்கு பெயர் வருமா, வராதா? என்பதை என்னால் தெளிவாக கணிக்க முடியும். 

ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே போதும். அவரின் அந்தரங்க விஷயங்கள் என்ன என்று புரிந்து கொள்வேன். அப்படிப்பட்ட எனக்கு கதை வலுவானதா, இல்லையா? என்பதை சுலபமாக உணர முடியும்"   என்றார்.