நடிகராக மாறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய் நடித்த 'சர்கார்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளில் அவர் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகராகவும் மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் ஒரு சிறு காட்சியில் தோன்றி வரும் நிலையில் தற்போது 'நோட்டா' என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்துள்ளார்.

'நோட்டா' திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவியாளராக இருந்த ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் படம் என்பதும் இந்த படத்தில் அர்ஜூன் ரெட்டி பட புகழ் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், மெஹ்ரின் , நாசர், சஞ்சனா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பிர்யதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையாமித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.