பரோட்டா சூரி இல்ல... இனி சிக்ஸ்பேக் சூரி!

கடந்த 8 மாத கடின உழைப்புக்குப் பின், தன் உடலமைப்பை சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாற்றியுள்ளார் நடிகர் சூரி.  அவரது புதிய தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா காமெடி மூலம் பிரபலம் ஆனவர் சூரி .

தமிழில் முன்னணி நடிகர்களான, அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்து, தனக்கென சினிமாவில் சிறப்பான இடத்தை உருவாக்கினார். அதிலும், சிவகார்த்திகேயன்- சூரி கூட்டணிக்குத் தனி ரசிகர்களே உண்டு.

அந்தவகையில் சிக்ஸ்பேக்குடன் நடிகர் சூரி நின்றுகொண்டிருப்பது போன்றதொரு புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``இது நம்ப சிக்ஸ்பேக் சூரி. 8 மாத கால, கடின உழைப்பு இது. இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்று கூறியுள்ளார்.