துன்னாலையில் கசிப்பு காய்ச்சும் இடத்தில் தப்பி ஓடிய பெண்!! துரத்திப் பிடித்த பொலிஸ்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கிருந்து 115 லீற்றர் கோடா, 10 லீற்றர் கசிப்பு மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.