விக்கி மீது சம்பந்தன் பாய்ச்சல்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றார். அவரின் கருத்துக்குப் பதிலளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வியாழக்கிழமை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம் தமிழ் ஊடகம் ஒன்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் ஒவ்வொரு நாளும ஒவ்வொன்றைக் கூறி வருகின்றார். நீங்கள் கேட்கும் அவரின் கருத்துக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.