அண்மையில் வெளியான படத்தை பார்த்து மிரண்டுப்போன தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் வடசென்னை படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். 

இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ள "ராட்ச்சசன்" படம்  சைக்கோ கொலையாளியைப் பிடிக்க போராடும் ஈகோ போலீஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனிஸ்காந்த் ராமதாஸ், ராதாரவி, நிழல்கள் ரவி, காளி வெங்கட், கஜராஜ் வினோதினி,  சூசன் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தனுஷ் ஆச்சர்யப்பட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, வாவ்.. என்ன ஒரு திரில்லர்.  புத்திசாலித்தனமாகவும் மற்றும் ஸ்டைலான விதத்திலும் இப்படத்தை தயாரித்துள்ளனர். "படம் சீட்டின் நுனிக்கு கொண்டுசென்றுவிடுகிறது, படம் முழுக்க த்ரில்லிங்காக நம் கவனத்தை ஈர்க்கிறது" இந்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் என தனுஷ் கூறியுள்ளார்.