மகன் பயங்கர கொள்ளைக்காரன்!! தந்தை வடக்கு மாகாண எதிர்க்கட்சி முக்கியஸ்தர்!!

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்டு வந்த “ஹெல்மட் திருடர்கள்“ கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருடும் போதே கொள்ளைக் கும்பலை சேர்ந்த ஒருவன் சிக்கினான். அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளைக்கும்பல் குறித்த உண்மைகள் அம்பலமாகின.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம், வடக்கின் அரசியல் முக்கியஸ்தர் ஒருவருடைய மகனும், இந்த திருட்டு கும்பலில் இணைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலே. எனினும், இரண்டு தரப்பும் இணக்கமாக செல்ல சம்மதித்ததன் அடிப்படையில் பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள அல்பா மிக்சர் வர்த்தக நிலையத்தில் கடந்த வாரம் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இளைஞன் ஒருவன், பொருட்களை மறைத்து வைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முனைந்தது சிசிரிவி கமராவில் பதிவாகியது. இதையடுத்து, இளைஞனை பிடித்து வர்த்தக நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வர்த்தக நிலையத்தில் மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் அணிந்தபடி பொருட்களை வாங்கச் செல்லும் சில இளைஞர்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. உடனடியாக பழைய சிசிரிவி காட்சிகளை பரிசோதனை செய்தபோது, பழைய திருட்டு காட்சிகள் அம்பலமாகின. கையும்மெய்யுமாக சிக்கி கட்டி வைக்கப்பட்டிருந்த திருடனை விட, இன்னொரு இளைஞனும் இணைந்து அதற்கு முன்னர் பல தடவைகள் திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் கமெராவில் பதிவாகியிருந்தது. தன்னுடன் முன்னர் திருட்டில் ஈடுபட்ட மற்றைய இளைஞனின் பெயர், தொலைபேசி இலக்கத்தை மாட்டுப்பட்ட இளைஞன் வழங்கினான்.

இதையடுத்து, அந்த இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பேசிய வர்த்தக நிலையத்தினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தினர். அப்போதுதான், தனது தந்தையார் ஒரு அரசியல் பிரமுகர் என்றும், தான் தற்போது கொழும்பில் அலுவலாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்ட இளைஞன், விடயத்தை பெரிதாக்காமல் விடுமாறு வினயமாக வேண்டியிருக்கிறார்.

குறிப்பிட்ட தொகை பணத்தை தருவதாகவும், இந்த விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் குறித்த இளைஞன் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தில் இளைஞன் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்த தகவல் கோப்பாய் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தெரிய வர, சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றுள்ளனர்.

எனினும், இதற்குள் வடக்கு முக்கிய அரசியல் புள்ளியும் நேரடியாக வர்த்தக நிலையத்துடன் பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ளவும், சிசிரிவி கமெரா காட்சிகளை அழித்து விடவும் சில “லகரங்கள்“ பேரம் பேசப்பட்டது.

வர்த்தக நிலையத்திற்கு பொலிசார் சென்றபோது, இரு தரப்பும் இணக்கமாக பேசி விவகாரத்தை முடிப்பதாக பொலிசாருக்கு சொல்லப்பட்டது. முக்கியஸ்தர்கள் சம்பந்தமான விவகாரம் என்பதால், பொலிசாரும் அதற்கு வாய்ப்பளித்தனர்.

குறிப்பிட்ட “லகரங்கள்“ கொடுக்கப்பட்டு விவகாரம் சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி கமெரா காட்சிகளை தமிழ் பக்கம் பெற்றுள்ளது. இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விவகாரமொன்றின் காட்சிகளை பகிரங்கப்படுத்துவது முறையற்றது என்பதால், அந்த காட்சிகளை பகிரங்கப்படுத்துவதை தவிர்த்துள்ளோம்.

சரி, இவ்வளவும் சொல்லிவிட்டு, அந்த அரசியல்வாதி யார் என்பதை சொல்லாமல் போகிறோம் என்று பார்க்கிறீர்களா?

அவரது பெயரை நேரடியாக நாம் சொல்லப் போவதில்லை. ஒரு “க்ளூ“ மட்டுமே தருவோம். வடமாகாணசபையின் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார் மாகாணசபைக்குள் அதிகமாக நீதி, நியாயம் பேசுவார்!

 ஊருக்கு உபதேசம் பெண்ணே அது உனக்கில்லையடி கண்ணே என்பதைப் போலத்தான் குறித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சி முக்கிய பிரமுகராகவும் வடக்கு தவமான ராசாவாக இருந்து முதலமைச்சரைத் தாக்குபவராகவும் இருந்துவரும் குறித்த அரசியல்வாதி தனது மகனை தறுதலையாகவே வளர்த்து வருகின்றார். குறித்த அரசியல்வாதியின் மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைக்குச் சென்ற வரலாறும் உள்ளது.

மிகுதி உங்கள் ஊகத்திற்கு!