முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு: நால்வர் படுகாயம் - ஒருவர் ஆபத்தான நிலையில்....

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இலக்கான நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைவேலிப்பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் அத்துமீறி வீட்டிற்குள் நுளைந்த மர்ம கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. சம்பவத்தின் போது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் நல்வர் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.