யாழ். வடமராட்சியில் மாடு வெட்டிய இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அனுமதி எதுவுமின்றி மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய இருவரை நெல்லியடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.துன்னாலைப் பகுதியிலுள்ள காணியொன்றில் சில வருட வயதேயான மாடொன்றினைச் சிலர் இறைச்சிக்காக வெட்டுவதாக நேற்றைய தினம்(03) நெல்லியடிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் மாடு வெட்டிக் கொண்டிருந்தவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அனுமதியின்றி மாடு வெட்டிய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் இன்றைய தினம்(04) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.