வவுனியாவில் பொலிஸாரின் அதிரடி! 3 பேர் அதிரடியாக கைது

வவுனியாவில் 7 கிலோ கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமந்தைப் பாடசாலைக்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் குழு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.