முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் கயமடைந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

நேற்று பிலவுக்குடியிருப்பு பகுதியில் காணியினை உளவு இயந்திரத்தால் காணியை செம்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது காணியில் இருந்த குண்டு ஒன்று வெடித்ததில் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த அரியராசா ஜெகன் 37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.