யார் தளபதி? அப்பாவா? விஜய்யா? உதயநிதி பளிச் பதில்

திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள் தளபதி என்ற புனைபெயருடன் அழைத்து வரும் நிலையில் நடிகர் விஜய் தளபதி என்று அழைக்கப்படுவதை திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என சமூக வலைத்தளதில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். 

அதற்கு ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திரையுலக தளபதி என்றால் அது விஜய் அண்ணாதான் என பதிலளித்துள்ளார். அதேபோன்று திரையுலக தல என்றால் அது அஜித்தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

உதயநிதி ஸ்டாலினின் சமார்த்தியமான இந்த பதில் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. அதோடு, அரசியலையும், சினிமவாஇ ஒன்று சேர்க்கமல் அவர் பதில் அளித்ததை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர்.