வெளியானது 2.0 மேக்கிங் வீடியோ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்ஸன் ந்டிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் மற்றுமொரு மேக்கிங் வீடியோ வெளியாகியிள்ளது.

ரஜினிகாந்த் நடித்த எந்திரன்’ படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகமாக ‘2.0’  எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 550 கோடி செலவில் உருவாகிவரும் இந்த படம் சென்ற ஆண்டு தீபாவளிக்கே  ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கிராபிக்ஸ் பணிகளின் தாமத்தால் படம் தற்போது இந்தாண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். 

கடந்த மாதம் இப்படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னும் பட வெளியீட்டுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதை முன்னிட்டு தற்போது 2.0 படத்தின் மற்றொரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 2 நிமிடம் ஓடும் அந்த வீடியோ படத்தில் உள்ள கிராபிக்ஸ் ஷாட்களின் எண்ணிக்கை, அதில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், வேலையில் ஈடுபட்டுள்ள விஎஃபெக்ஸ் பணியாளர்கள் என பல தகவல்களை நமக்கு சொல்கிறது. கிட்டத்தட்ட 1000 பணியாளர்கள் வேலை செய்து வரும் கிராபிக்ஸ் வேலைகள் உள்ள ஷாட்களின் 2150 ஆகும்.