ஷங்கரை ஏமாற்றிய கிராபிக்ஸ் கம்பெனி

இந்திய சினிமாக்களின் மிகப்பிரம்மாண்டமான படம் என்றால் அது ஷங்கர் உருவாக்கி வரும் 2.0 படம் தான்,  இந்த படம் எப்போதா வெளியாகி இருக்க வேண்டியது, ஆனால் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்எஸ் பணிகள் முடியாததால் படம் வெளியீடு தாமதம் ஆனது, 

இது குறித்து ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

'2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டோம். அந்த நிறுவனம் சென்ற தீபாவளிக்கு முன்பே வேலையை முடித்துக் கொடுத்திருக்க வேண்டாம். ஆனால் அவர்கள் தரவில்லை. கொஞ்சம் தாமதமாகும் என்றார்கள். அதனால் படம் வெளியாவது தள்ளிப்போனது.

2

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பின்னர் கிராபிக்ஸ் பணிகள் குறித்து பார்த்த போது, அவர்களுக்க கிராபிக்ஸ் பணிகளை செய்யும் அளவுக்கு தகுதி இல்லை என்பது எங்களுக்கு தெரியவந்தது, இதனால் நாங்கள் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு 2100 விஎப்எக்ஸ்  காட்சிகளை பிரித்து கொடுத்தோம்.

அதன்பின்னர் ஒவ்வொரு வேலையையும் ஆரம்பத்தில் இருந்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, இது தான் படம் வெளியாவதற்கு தாமதமாக  காரணமாகி விட்டது' என்றார்,