ரணில் – மகிந்த விசேட சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.சுமார் 20 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பாதுகாப்புச் சபையின் தீரமானத்திற்கு அமையவே, மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கான இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முக்கியஸ்தர்களுக்கான இராணுவப் பாதுகாப்பை நீக்கி கொள்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மாத்திற்கு அமையவே, பாதுகாப்பு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.