பிக்பாஸ் 2: மொக்கையான ஃபைனலுக்கு ஆறுதலாக அமைந்த கேபிஒய் டீம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி தற்போது நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் ஆகியுள்ள நிலையில் நிகழ்ச்சி இதுவரை மொக்கையாகவே உள்ளது. இந்த வாரம் ஐந்து நாட்களும் இருந்தது போலவே ஏற்கனவே காண்பித்த நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் காண்பித்து வெறுப்பேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கலக்க போவது யாரு? டீம் உள்ளே நுழைந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கியுள்ளனர். பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் போலவே நடித்து காட்டிய விதம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. குறிப்பாக பாலாஜி, மும்தாஜ் ஆக நடித்தவர்களின் நடிப்பு மிக அருமை.

நிகழ்ச்சியை வேண்டுமென்றே ஜவ்வாக இழுத்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் வெறுப்பாகி வருகின்றனர். இருப்பினும் ரித்விகா வின்னர் டைட்டிலை பெறுவதையும் ஓவியாவின்

வருகையையும் பார்க்க வேறு வழியில்லாமல் மூன்று மணி நேர கொடுமையை பார்வையாளர்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.