உயர்தரத்தில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற யாழ் மாணவர்கள்!!

இன்று அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய இம்முறை முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பவியல் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருனைநாயகம் ரவீகரன் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொறியில் துறையில் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்ற யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பால சுப்ரமணியம் ஞானகீதன் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் புத்தளம் ஜனாதிபதி கல்லூரியின் மாணவன் ஜே.எம்.மொஹமட் முன்சீப் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை கொழும்பு 7, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரியின் மாணவி பாத்திமா அம்ரா இஸ்மைல் பெற்றுக் கொண்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்…

உயிரியல் விஞ்ஞான பிரிவு
1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி

கணித பிரிவு
1 ஆம் இடம் – தசுன் ஓஷத – கொழும்பு ரோயல் கல்லூரி
2 ஆம் இடம் – நதீஷான் தனன்ஜய – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
3 ஆம் இடம் – சவித் நில்மன்த்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்

வணிக பிரிவு
1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி
3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி

கலைப் பிரிவு
1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி

பொறியியல் பிரிவு
1 ஆம் இடம் – ஷானக அநுராத – மாத்தளை புனித தோமியன் கல்லூரி
2 ஆம் இடம் – இஷார புந்திக்க – கொழும்பு ஆனந்த கல்லூரி
3 ஆம் இடம் – பாலசுப்ரமணியம் ஞானகீதன் – யாழ். இந்து கல்லூரி

தொழில்நுட்பவியல் பிரிவு
1 ஆம் இடம் – வாசனா நவோதனி – பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயம்
2 ஆம் இடம் – கருனைநாயகம் ரவீகரன் – யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி
3 ஆம் இடம் – உபுலி அநுத்தரா – கேகாலை சுவர்ண ஜயன்த்தி மகா வித்தியாலயம்