அராலி வடக்கில் மீண்டும் கொடூரம்!! கொள்ளையடித்து கோயிலுக்குள் சிறுநீர் கழித்தார்கள்

அராலி வடக்கு முருகமூர்த்தி கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த திருடர்கள் காவலாளியை தாக்கிவிட்டு உண்டியலை திருடிச் சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு குறித்த கோவிலுக்கு நுழைந்த 3 பேர் காவலாளியை தாக்கி கோவில் திறப்பை கேட்டுள்ளனர். பின்னர் கோவிலுக்குள்

சிறுநீர் கழித்து அசிங்கம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த காவலாளி குறித்த சம்பவம் தொடர்பாக அய லவர்களுக்கு அறிவித்து பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.