மோட்டார் சைக்கிளும்- பட்டா ரக வாகனமும் நீர்வேலியில் விபத்து – இளைஞன் காயம்!!

மோட்டார் சைக்கிளும்- பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்தார்.இந்த விபத்து இன்று காலை நீர்வேலி வடக்கு மாசுவன் சந்தியில் நடைந்துள்ளது.

கோப்பாய் இராசவீதியூடாக நிலாவரை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மாசுவன் சந்தியை கடக்க முற்பட்ட போது, அச்செழு வீதியூடாக நீர்வேலி சந்தி நோக்கி மோட்டார் சைக்கிளில் பட்டா ரக வாகனத்துடன் மோதியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காலில் காயமடைந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளும் ஒருபகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.