கல்வியியல் கல்லூரியில் பயின்ற கிளிநொச்சி மாணவி திடீர் மரணம்…!!

இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கிளிநொச்சியை சேர்ந்த கல்வியல் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விசுவமடு மேற்கை சேர்ந்த 23 வயதுடைய சிவலிங்கம் ஜிந்துஜா எனும் மாணவியே உயிரிழந்தவராவார்.அழுத்கம கல்வியல் கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்று வரும் மாணவி கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டு இருந்தனர். அந்நிலையில் திடீரென மாணவி சுகவீனமுற்றதை அடுத்து மாணவி வீட்டாரிடம் கல்வியல் கல்லூரி நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டார்.