16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது!!

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் முதியவரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் 50 வயதான முதியவரொருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைதான நபர் நேற்றைய தினம்(09) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும்-21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த முதியவரால் சித்திரவதைக்குள்ளான மாணவிகள் அனைவரும் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.