ஏ9 வீதியில் விபத்துகளை தடுக்க - மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான  ஏ9 வீதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக  மேற்கொள்ள வேண் டும் என கோரி வடக்கு மாகா ணசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை யின் 129-வது அமர்வு நேற்று மாகாணசபை சபா மண்டப த்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் அவைத்தலைவர் அவசர பிரேரணையாக மேற்குறித்த விடயத்த முன்மொழிந்திருந்தார்.

 

குறித்த பிரேரணையில் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பல நூற்றுக்கண க்கானவர்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மிகப் பெரும்பான்மையான விபத்துக்கள் ஏ9 வீதியோரங்களில் இரவு நேரங்களில் நிறு த்தி வைக்கப்பட்ட வாகனங்களுடன் மோதிய தனாலேயே ஏற்பட்டது. கடந்த 2018.08.06 ஆம் திகதி இயக்கச்சியில் இடம்பெற்ற விப த்து,இதற்கான அண்மைய உதாரணம் ஆகும்.

எனவே வவுனியாவிலிருந்து யாழ்ப்பா ணம் வரையான ஏ9 வீதியின் இருமருங்கி லும் வாகனங்கள் தரித்து நிற்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ்மா அதிபரையும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற் றும் யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர்க ளுக்கு தெரியப்படுத்துவதோடு.  

ஏ9 வீதியில் பொருத்தமான இடங்களில் வீதிக்கு அப்பால் வாகனத் தரிப்பிடங்களை ஏற்பாடு செய்வதற்கு வட மாகாண வீதி அதிகாரசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரை களை முதலமைச்சர் வழங்க வேண்டும் எனவும் தற்செயலாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு 30 மீற்றருக்கு அப்பால் பின்புறமாக சிவப்பு ஒளி வீசும் முக்கோண ஒளிர்திகளை வைப்பத ற்கான ஏற்பாடுகள் சகல வாகனங்களிலும் இருப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வ தற்கான விதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை வட மாகாண போக்கு வரத்து அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு சார்பாக பல உறு ப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத் திருந்தனர். இந்த பிரேரணை அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.