யாழில் தொண்டையில் பாண் சிக்கி முதியவர் உயிரிழப்பு!!

தோட்டத்துக்கு சென்று வீடு திரும்பிய முதியவர் பாண் சாப்பிட்டுள்ளார். அது தொண்டையில் சிக்கியதில் முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி மறுவன்புலவு பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 61 வயதுடைய முதியவரே உயிரிழந்தார்.

முதியவரின் சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.