வல்லை வெளியில் நிமிராமல் வளைந்து நிற்கின்ற அது யாருடையது!!

யாழ் வல்லை வெளியில் பிரதானவீதியில் நீண்ட காலமாக இந்த துாண் போன்ற அமைப்பு அரை குறையாக கட்டப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது எதற்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அப்பால் இவ்வாறு நீண்ட காலமாக வீதியில் பயணிப்போருக்கு இடையூறாக இருப்பதையிட்டு பொறுப்பவாய்ந்த அதிகாரிகள் எவரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. வீதி போக்குவரத்து அதிகார சபையோ அல்லது வலிகாம் கிழக்க பிரதேசசபையோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகின்றது.

தென்பகுதியில் இவ்வாறான ஒரு பிரதான வீதியில் ஏதாவது ஒரு புனரமைப்போ அல்லது ஏதாவது திருத்தங்களோ செய்வதாயின் குறுகிய கால நேரம் கொடுத்து அந்த வேலை உடனடியாக முடிக்கப்பட்டுவிடும். அவ்வாறான நிலையிலேயே தென்பகுதி நிர்வாகங்களை பொறுப்பெடுத்து அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். இவ்வாறான வேலைகள் நிலைவடையாது விட்டால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் சம்பவங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன.

ஆனால்  யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி நிலைமையை இந்த வீதித் துாணின் நிலையை வைத்தே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

குறித்த வீதியில் அரைகுறையாக கட்டப்பட்டுள்ள இந்த துாணின் வீதித் தடை காரணமாக அண்மையில் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய விபத்துக்கள் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய நிலையில் குறித்த துாண் அரைகுறையாக கம்பிப் பொருத்துக்களுடன் காணப்படுவதை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்களா?

அல்லது தமிழன்தானே... கேட்பதற்கு யாருமில்லை என்ற எண்ணத்தில் அசமந்தமாக இருப்பார்களா?