யாழில் கொடூரம்!! பெற்ற மகளையே வல்லுறவுக்குள்ளாக்கிய தந்தை!

தனது சொந்த மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றுமுன்தினம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.சிறுமியின் தாய் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தந்தையார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையை தலைமறைவாகி இருந்தார். எனினும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.மகள் மருத்துவ பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .