யாழ்ப்பாணத்தில் தீப்பெட்டிக்கு பெரும் தட்டுப்பாடு…..!! பொதுமக்கள் பெரும் அசௌகரியம்……!!

தீப்பெட்டிகள் தயாரிப்பதற்கு அவசியமான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சென்பொஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் யாழ் குடாநாட்டிலும் தீப்பெட்டிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட முக்கிய பாவனைப் பொருட்களில் ஒன்றான தீப் பெட்டி பல கடைகளிலும் இப்போது இல்லாமல் போயுள்ளதுடன் சில கடைகளில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த பல வர்த்தகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ப்பெட்டிகள் தயாரிப்பதற்கு அவசியமான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சென்பொஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல தீப் பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும், இதனால் தீப் பெட்டிகளின் வரவு பெருமளவில் நின்ற போயுள்ளதாகவும் எனவே அதிக விலையில் விற்கப்படும் தீப்பெட்டிகளையே தாம் வாங்கி விற்பனை செய்வதாகவும் இதற்கு தாங்கள் எவ் விதத்திலும் பொறுப் பெற்க முடியாதெனவும் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டில் பல கடைகளிலும் தீப் பெட்டி குறைந்தது 10 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாவும் பல கடைகளில் அதுவும் இல்லையெனவும் யாழ் நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் . யாழ் நகரில் மட்டுமல்லாது குடாநாட்டிலும் வடபகுதியின் ஏனைய மாவட்டங்களிலும் இது தான் நிலைமை எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர் .

வீடுகளில் சமையல் தொடக்கம், விளக்கு வைத்தல், போன்ற பல்வேறு தேவைகளுக்கும் மிகவும் அத்தியாவசியமான தீப் பெட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், இல்லத்தரசிகள் முதல், அனைத்து தரப்பினரும் ஏதோவொரு வகையில் பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது . தீப்பெட்டிக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாகவுள்ளது.