இயக்கச்சி விபத்தில் இறந்தவர்கள் இவர்கள்தான்!! பெண் லண்டனில் இருந்து வந்தவர்!!

கிளிநொச்சி இயக்கச்சியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் வேனில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மின்சார சபையின் வாகனம் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே இவ்விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்கள்.

லண்டனில் இருந்து வந்த சுதாகரன் பிரசாந்தினி (வயது - 47)

மற்றும் அவரது தங்கையின் கணவருமான சில்லாலையைச் சேர்ந்தவரும் தற்போது பருத்தித்துறையில் வசிப்பவருமான லூயிஸ் அன்ரனிஸ் (வயது - 42)என்பவருமே உயிரிழந்தவர்களாவர்.