கிளிநொச்சியில் அரச வங்கியின் திறப்பு திருட்டு

கிளிநொச்சியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு இனம் தெரியாத நபரால் திருடப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணியளவில், பொலிஸ் நிலையத்திலிருந்து திறப்பு எடுத்து செல்லும் போதே திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஒருவரால் குறித்த திறப்பு திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.