மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!! யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது!!

யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரி ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை இன்று (18) இரவு கைது செய்தனர்.

ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.