கணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா? அஸ்மினிடம் ஆதாரமா?

அரசாங்கத்திடன் அந்தச் சாமானை அனந்தி பெற்றுள்ளாரா? அஸ்மினிடம் ஆதாரமா?பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன.அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.எனினும் இதனை அனந்தி மறுத்து ஊடகங்களுக்கு செய்திக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அஸ்மினை தொடர்பு கொண்டு கேட்ட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.இதனை அவர் மறைக்க ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.

கணவர் இல்லாத காரணத்தாலும் முக்கிய பிரமுகராக வலம்வருகின்ற காரணத்தாலும் அனந்தி தனது பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கியை அரசாங்கத்திடம் பெற்றிருக்கலாம்.

அதில் எந்தவித தப்பும் இல்லை.ஆனால் யாரிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க அனந்தி கைத் துப்பாக்கி பெற்றார்?அவ்வாறு பெற்றதையும் ஏன் மறுத்து அறிக்கை வெளியிட்டார்?

தான் துப்பாக்கி பெற்றதை மக்களுக்கு மறைப்பதற்கான காரணம் என்ன?அரசாங்கத்துடன் அனந்தி சேர்ந்து நடக்கின்றாரா?

அதனால் யாருக்கோ பயந்து துப்பாக்கியைப் பெற்றாரா? என பல்வேறு கோணத்தில் , அனந்தியின் நடவடிக்கை தொடர்பாக வடக்கு மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.