கஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு!!

தமிழீழ விடுதலைப்புலிகளால் வலிந்து ஐ.தே.க கட்சியில் தானும் தனது அண்ணணும் சேர்க்கப்பட்டதாக கூறும் யாழ்ப்பாண வடிவேலு துவாரகேஸ்வரன் புலிகளின் பிரதிநிதியாக யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவையில் தலைவராக்கப்பட்ட கஜேந்திரனை ( இவரை முன்னாள் அமைச்சர் டக்களஸ் குதிரைக் கஜேந்திரன் என்றே அழைப்பவர்) ஊடகம் ஒன்றில் வைத்து குதிரை ஓட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண ஊடகங்களை அவதானிப்பவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.  

கஜேந்திரன் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமை யார் எதிர்த்தாலும் அவர்களை தங்களது முதுகில் ஏற்றிச் சுமந்து செல்வார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூளை பலவீனமான நிலையில் உள்ள துவாரகேஸ்வரனை ஊடகம் ஒன்று அழைத்து கஜேந்திரனின் முதுகில் ஏறி குதிரைச் சவாரி செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐயர் மந்திரம் ஓதுவது போல், எக்காளத்தொனி மற்றும் பெந்துகோஸ் சபையினர் ஆர்ப்பரித்து சுலோகம் சொல்வது போல் கஜேந்திரன் மூச்சு விடாது தேசியம் பேசுவதை ஜ.தே.க கட்சியில் ஆரம்ப உறுப்பினராக இல்லாமலே தன்னை யாழ் மாவட்ட அமைப்பாளராக கூறித்திரியும் விசரன் ரசிப்பதையும் விமர்சனம் செய்வதையும் கீழ் வரும் படத்தில் உள்ளது போல் இருப்பதாக யாழ்ப்பாணத்தில் மீம் உருவாக்குபவர்கள் கூறிச் சிரிக்கின்றார்கள்.

ஏற்கனவே உங்கட ஆள் ஒருவர் இந்த விசரனிடம் அலங்கோலப்பட்டுள்ளதாகவும் உங்கள் ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்

ஏற்கனவே உங்கட ஆள் ஒருவர் இந்த விசரனிடம் அலங்கோலப்பட்டுள்ளதாகவும் உங்கள் ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்

‘படிக்கிற பெடியலோடு சேர்ந்து திரியுங்கோடா.... அவங்களோட சண்டை பிடிக்கிறது என்றால் பிடியுங்கோட... சக்கட்டைகளோட சேராதேங்கோடா என்று பாடசாலை படிக்கும் பருவத்தில் எங்களது வகுப்பு வாத்தியார் அடிக்கடி எங்களுக்கு சொல்வார்......

அப்புடித்தான் இதுவும் கஜேந்திரன் அவர்களே..... பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்களில் 500 வாக்கு கூட பெற்றிராத யாழ்ப்பாண வடிவேலுவுக்கு நீங்கள் பதில் சொல்ல தொடங்கினால் ஒன்றில் நீங்கள் கவுண்டு விழுவீர்கள்... இல்லாவிட்டால் யாழ்ப்பாண வடிவேலு கதாநாயகன் ஆகிவிடுவார் ‘ இப்படி கருத்துச் சொல்லியுள்ளார்கள் சைக்கிள் கட்சி ஆதரவாளர்கள் சிலர்.

அருமையாக முகப்புத்தகத்தில் கவிதைகள் சொல்லித் திரியும் அந்தப் பெடியனை நடுவில இருந்திப் போட்டு இரண்டு பேரும் செய்யும் லீலைகள் சொல்லி மாளாது.

கஜேந்திரனும் வடிவாகத் தெரியும் விடுதலைப்புலிகள்தான் மகேஸ்வரனைச் சுட்டது என்று. அப்படி இருந்தும் துரோகி குடும்பத்துடன் ஒட்டியிருந்து அண்ணை, அண்ணை என்று கதைக்கும் கஜேந்திரனின் செயற்பாடு பல்வேறு சந்தேகத்தைத் தருவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைக்கிள் கட்சி ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள்.

தற்போது தமிழ் ஊடகப்பரப்பில் ஐ.பி.சி ஊடகம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. இந் நிலையில் துவாரகேஸ்வரன் போல போலி அமைப்பாளர்களை இனங்காண வேண்டியது ஊடகத்தின் தலையாய கடமையாகும். ஐ.பி.சி ஊடகத்தை நம்பி மக்கள் துவாரகேஸ்வரனை யாழ் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் என்றே நினைப்பார்கள். ஆகவே ஐ.பி.சி ஊடகமானது துவாரகேஸ்வரனை இனிவரும் காலம் பேட்டி காண முற்பட்டால் அவருக்கு ஐ.தே.க கட்சி அமைப்பாளர் பதவி கொடுத்ததற்கான ஆதரத்தைப் பெற்ற  பின்னரே அவரை அமைப்பாளராக கதைக்க வைக்க வேண்டும். இல்லாவிட்டால் துவாரகேஸ்வரனை ஐ.தே.க கட்சியின் தீவிர வெறியர் என்றே ஐ.பி.சி சேவை தெரிவிக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் ஐ.பி.சிக்கு இருக்கும் செல்வாக்கை ஒரு சிலரால் ஐ.பி.சி இழக்க கூடாது என யாழ்ப்பாண பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.