விஜயகலாவின் திருவிளையாடல்!! வடக்கு முதலமைச்சரிடம் சீ.ஐ.டி விசாரணை!!

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரச உத்தியோகத்தர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வித்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்தவனைத் தப்ப வைக்க முயன்ற விஜயகலா, தனது கணவனான துவாரகேஸ்வரனைப் புலிகள்தான் சுட்டார்கள் என்பதையும் மறைத்து தனது வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்வதற்காக வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் புலிகளைப் புகழ்ந்து பேசினார் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.